
தமிழில் தனக்கென ஒரு நிரந்தர இடம் கிடைக்காதா என போராடி வருபவர் ரகுல். சில படங்களில் நடித்திருந்தாலும் பெருசாக கிளிக் ஆகாத நடிகை என பெயரெடுத்துள்ளார். தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடித்தவர் இவர்.

தெலுங்கில்தான் இவர் நடித்த படங்கள் அதிக ஹிட் அடித்தது. எனவே, தெலுங்கு மொழியில் அதிக படங்களில் நடித்து வருகிறார். தமிழில் இவர் நடிக்கும் திரைப்படங்கள் பெரிய வெற்றியை பெறுவதில்லை. சூர்யாவுடன் என்.ஜி.கே, கார்த்தியுடன் தேவ், மகேஷ் பாபுவுடன் ஸ்பைடர், கார்த்தி நடிப்பில் தீரன் அதிகாரம் ஒன்று, சிவகார்த்தியன் நடிப்பில் அயலான் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

தற்போது ஹிந்தி படங்களில் நடிக்க முயற்சி செய்து வருகிறார். மேலும், கவர்ச்சியான உடைகளில் விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

இந்நிலையில், ரகுல் ப்ரீத் சிங்கின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Editorial Desk February 24, 2023 & 15:18 [IST]