
டாப் ஸ்டார் பிரசாந்த் நடித்த விரும்புகிறேன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தார் சினேகா. தாவணி பாவாடை, அழகிய சேலை, அதிகபட்சம் சுடிதாரில் பல ரசிகர்களின் மனதை கவர்ந்தவர். இளம்பெண்களே சினேகா மீது பொறாமை கொள்வார்கள். அப்படி ஒரு அழகு.

துவக்கம் முதலே டீசண்டான வேடத்தில் மட்டுமே நடித்தவர். கமல், விக்ரம், சூர்யா, விஜய் என பெரிய நடிகர்கள் வரை ஜோடியாக நடித்திருக்கிறார்.

நடிகர் பிரசன்னாவை காதலித்து வந்த இவர், பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். சினேகாவுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். திருமணத்திற்கு பின் தெலுங்கில் குணச்சித்திர வேடங்களில் நடித்தார். தமிழிலும் சில படங்களில் நடித்தார். விளம்பரப்படங்களிலும் நடித்து வருகிறார்.

சமீபகாலமாக உடல் அழகை வெவ்வேறு உடைகளில் காண்பித்து போஃட்டோஷூட் செய்து சமூகவலைத்தலங்கள் வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறார்.

சினேகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Editorial Desk February 24, 2023 & 15:31 [IST]