
பிரம்மாண்ட படங்களை இயக்கி உலகமெங்கும் உள்ள சினிமா ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திவதில் கில்லாடியான ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியாகி மாஸ் ஹிட் அடித்த திரைப்படம் அவதார். அனிமேஷன் தொழில்நுட்பத்தில் கற்பனையில் பூந்து விளையாடிய ஜேம்ஸ், இப்படத்தின் மூலம் ரசிகர்களை மற்றொரு உலகத்திற்கு அழைத்துச் சென்றிருந்தார். இந்த படம் சுமார் 290 கோடி அமெரிக்க டாலர்களை வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்தது.

அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, சுமார் 13 ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு அவதார் படத்தின் இரண்டாம் பாகம் அவதார்: தி வே ஆஃப் வாட்டர் என்ற பெயரி முழுக்க முழுக்க 3டி தொழில்நுட்பத்துடன் கடந்த 2022 டிசம்பரில் உலககெங்கும் பிரம்மாண்டமாக ரிலீஸானது. சுமார் 160 மொழிகளில் வெளியான இந்தப் படம் இதுவரை 230 கோடி அமெரிக்க டாலர்கள் வசூலித்துள்ளது.
கடந்த ஆண்டு வெளியான படங்களில் அதிக வசூல் செய்த படங்களில் முதலிடத்தையும், இதுவரை அதிகம் வசூலித்த படங்களில் 3வது இடத்தையும் இப்படம் பிடித்திருக்கிறது. இருப்பினும், முதல் பாகத்தின் வசூலை இப்படத்தால் எட்டமுடியவில்லை.

அவதார் 2 ஓடிடி ரிலீஸ்
இந்த நிலையில், அவதார் 2 திரைப்படம் இன்று முதல் ஓடிடியில் ரிலீஸ் ஆகி உள்ளது. இப்படம் இன்று (மார்ச் 28) முதல் அமேசான் பிரைம் மற்றும் ஆப்பிள் டிவி ஆகிய ஓடிடி தளங்களில் ரிலீஸ் ஆகி உள்ளது. கோடை விடுமுறை நெருங்குவதால் இந்த சம்மரில் குழந்தைகளுக்கு செம ட்ரீட்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவதார் 2 திரைப்படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகி 4 மாதங்களுக்கு பின் ஓடிடியில் ரிலீஸ் ஆகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Nandhinipriya Ganeshan March 28, 2023 & 15:05 [IST]