
ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் தெலுங்கு முன்னணி நடிகரான நானி நடித்து கடந்த மார்ச் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘தசரா’. இதில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ், தீக்ஷித் ஷெட்டி, பிரகாஷ் ராஜ், ஷைன் டாம் சாக்கோ, சமுத்திரகனி, பூர்ணா உட்பட பலர் முக்கிய நடித்திருக்கின்றனர்.
சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்தப் படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியானது. ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரித்த இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
ரூ.65 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.100 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்தது. இந்நிலையில், இப்படம் வரும் ஏப்ரல் 27-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Nandhinipriya Ganeshan April 20, 2023 & 14:03 [IST]