
அறிமுக இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் கவின், அபர்ணா தாஸ், பாக்யராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி சென்ற பிப்ரவரி 10 ஆம் தேதி தியேட்டரில் வெளியான படம் 'டாடா'. காதலனாக, கணவனாக, தந்தையாக தனது அருமையான நடிப்பை வெளிப்படுத்திய கவினுக்கு இந்த படம் உண்மையில் ஒரு பெரும் வெற்றி என்றே சொல்லலாம்.

அதுமட்டுமல்லாமல், இந்த படத்தை கமல்ஹாசன், கார்த்தி, தனுஷ் ஆகியோர் பார்த்து பாராட்டவும் செய்திருக்கிறார்கள். மக்கள் மனதிலும் குறிப்பாக இந்த காலத்து இளம் சந்ததியினர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று தந்தது. சரி விஷயத்திற்கு வருவோம்.

சமீப காலமாக திரைப்படம் தியேட்டரில் வெளியான பத்தே நாட்களில் ஓடிடியில் வெளிவந்துவிடும். அந்தவகையில், இளசுகளின் நெஞ்சில் ஒரு வாழ்க்கை கருத்தை அழகாக எடுத்துக்காட்டிய டாடா திரைப்படம் வருகின்ற 10 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாக இருக்கிறது. திரையரங்கில் படம் பார்க்க முடியாதவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு.
Nandhinipriya Ganeshan March 09, 2023 & 15:29 [IST]