
சசிகுமார் நடித்து கடைசியில் வெளியான திரைப்படம் அயோத்தி. இந்தப் படம் கடந்த மார்ச் மாதம் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பெரிய அளவு புரோமோஷன் எதுவும் இல்லாமல் வெளியான இத்திரைப்படத்தை இயக்குநர் மந்திரமூர்த்தி இயக்கினார். இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பின் மூலம் பலரது கவனத்தையும் பெற்றது.

பெரிய அளவு புரோமோஷன் இல்லாமல், ரசிகர்களிடைய நல்ல வரவேற்பைப் பெற்ற இத்திரைப்படமானது 25 நாள்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடியது. ஆனால், பூஜ்ஜிய அளவிலான எதிர்பார்ப்புடன் இருந்த இத்திரைப்படம், வெளியான பிறகு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது. மேலும், இது திரையரங்குகளில் நன்றாக ஓடியது.

இந்தப் படமானது மார்ச் 31 ஆம் தேதியே ஓடிடி தளத்தில் வெளியாக இருந்தது. ஆனால், அந்த சமயத்தில் திரையரங்குகளிலேயே படம் நன்றாக ஓடிய காரணத்தால், ஓடிடி வெளியீட்டை ஒத்தி வைத்தனர். மேலும், தயாரிப்பாளர்கள், இதனைச் சிறப்பூட்டும் வகையில் டிஜிட்டல் மற்றும் செயற்கைக்கோள் பார்வையாளர்களுக்கு மாற்ற முடிவு செய்துள்ளனர்.

அதன் படி, இந்தப் படமானது ஏப்ரல் 7 ஆம் தேதியான இன்று பிரபல ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. அதே சமயம், இது மாலையில் தொலைக்காட்சியில் திரையிடப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்தத் திரைப்படமானது மீண்டும் பார்வையாளர்களின் இதயங்களைக் கவர உள்ளதாகவும், பல்வேறு சமூக ஊடகங்களில் பேசப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திரைப்படமானது நிஜ வாழ்க்கையில் நடந்த சம்பவத்தால் ஈர்க்கப்பட்ட படமாகும். மனிதநேயத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறும் படமாக இந்தப் படம் உள்ளது.
Gowthami Subramani April 07, 2023 & 12:45 [IST]