
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடித்து கடந்த மார்ச் மாதம் 31ஆம் தேதி வெளியான படம் 'விடுதலை -1'. இப்படத்தில் விஜய் சேதுபது முக்கிய ரோலில் நடித்திருந்தார். மேலும், பிரகாஷ் ராஜ், பவானி ஸ்ரீ, ராஜீவ் மேனம், கௌதம் வாசுதேவ் மேனன், சேத்தன் உள்ளிட்ட பல பிரபலங்களும் நடித்திருந்தனர்.
அரசியலை நேர்த்தியாகவும் நேர்மையாகவும் கதையின் ஓட்டத்தில் அழகாக காட்டிய இப்படத்தை ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்குக்கு சென்று பார்த்தனர். கலவையான விமர்சனங்களை பெற்ற இப்படத்தில் சூரியின் நடிப்பை ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர். இளையராஜா இசை இப்படத்திற்கு மற்றொரு பிளஸ் பாயிண்ட். ஒவ்வொரு பாடலும் பலரது ஃபேவரைட் பாடலாக மாறிவருகிறது.
அதுமட்டுமல்லாமல், இப்படத்தைப் பார்த்த ரஜினிகாந்த விடுதலை படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டினார். இந்த நிலையில், விடுதலை முதல் பாகம் தற்போது ஜீ5 தளத்தில் [ஏப்ரல் 28,2023] வெளியாகி ஓடிடி ரசிகர்களிடம் கவனத்தை ஈர்த்து வருகிறது. அதுமட்டுமல்லாமல், சென்சாரில் கட் செய்யப்பட்ட 5 நிமிட காட்சியும் சேர்க்கப்பட்டுள்ளது.
Nandhinipriya Ganeshan May 01, 2023 & 12:05 [IST]