OTT அப்டேட்ஸ் :

ஹாட்ஸ்டார் வாடிக்கையாளருக்கு அதிர்ச்சி.. இனிமே இதலாம் பார்க்க முடியாது..

ஹாட்ஸ்டார் வாடிக்கையாளருக்கு அதிர்ச்சி..  இனிமே இதலாம் பார்க்க முடியாது..Representative Image.

பிரபல தொலைக்காட்சி நெட்வொர்க்கான ஹெச்பிஓ, டிஸ்னி + ஹாட்ஸ்டார் உடன் ஒப்பந்தம் வைத்திருந்தது. அதனால், HBO தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பும் நிகழ்ச்சிகள் மற்றும் அதன் தயாரிப்புகள் அனைத்தும் ஹாட்ஸ்டாரில் உங்களால் பார்க்க முடியும்.

பொதுவாக, ஓடிடி மற்றும் தொலைக்காட்சி/தயாரிப்பு நிறுவனங்களுக்கு இடையே ஒப்பந்தம் குறிப்பிட்ட காலகட்டத்திற்குதான் போடப்பட்டிருக்கும். அவர்களின் ஒப்பந்தம்  காலவதியாகும்போது, அந்த ஒப்பந்தத்தை மீண்டும் புதுப்பிப்பார்கள். 

ஆனால், இதுவரை டிஸ்னி + ஹாட்ஸ்டார் - HBO நிறுவனங்களுக்கு இடையேயான ஒப்பந்தம் புதிப்பிக்கப்படவில்லை. எனவே, இனி HBO நிறுவனத்தின் நிகழ்ச்சிகளை டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் இனி பார்க்க இயலாது. 

உதாரணத்திற்கு, உலக புகழ்பெற்ற வெப்-சீரிஸ், 'Game of Thrones' போன்ற தொடர்களை இந்திய வாடிக்கையாளர்கள் இனி டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் காண முடியாது. அதேபோல், ஐபிஎல் தொடரும் இதில் ஒளிப்பரப்பு ஆகாது என சொல்லப்படுகிறது. இத்தனை ஆண்டுகளில் ஹாட்ஸ்டாரில் இந்தாண்டு ஐபிஎல் தொடர் ஒளிப்பரப்பு ஆகாது என்பது இதுவே முதல்முறை.

Related Post :