
ஜெயம் ரவி, பிரியா பவானி ஷங்கர், தன்யா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்து மார்ச் 10 ஆம் தேதி வெளியான படம் அகிலன். கடந்த 2015 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் உருவான பூலோகம் திரைப்படத்தை இயக்கிய கல்யாண கிருஷ்ணன் தான் இந்த படத்தையும் இயக்கியுள்ளார். மேலும், இப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்துள்ளார்.
பொதுவாக ஒரு படம் தியேட்டரில் வெளியானதும் பத்தே நாட்களில் ஓடிடியில் வெளியிடப்படும். அந்தவகையில், பலவிதமான விமர்சனங்களுடன் இன்னமும் தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கும் அகிலன் படத்தின் ஓடிடி உரிமையை Zee 5 அதிகாரப்பூர்வமாக பெற்றுள்ளது. எனவே, மார்ச் 31 ஆம் தேதி முதல் அகிலன் படத்தை ஓடிடியில் கண்டுகளிக்கலாம்.

அகிலன் ஓடிடி ரிலீஸ் அப்டேட்:
படத்தின் பெயர் - அகிலன்
ஓடிடி பிளாட்ஃபார்ம் - Zee 5
ஓடிடி ரிலீஸ் தேதி - மார்ச் 31, 2023
தியேட்டர் ரிலீஸ் தேதி - மார்ச் 10, 2023
இயக்குநர் - என்.கல்யாண கிருஷ்ணன்
நடிப்பு - ஜெயம் ரவி, ப்ரியா பவானி சங்கர், தன்யா ரவிச்சந்திரன்
மொழி - தமிழ்
திரைப்படத் துறை - கோலிவுட்
Nandhinipriya Ganeshan March 16, 2023 & 18:52 [IST]