
வெங்க அட்லூரி இயக்கத்தில் தனுஷ், சம்யுக்தா, சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்த கடந்த மாதம் 17 ஆம் தேதி வெளியான படம் 'வாத்தி'. கல்வியை பின்னணியாக வைத்து உருவான இப்படத்தை தமிழ், தெலுங்கு என்ற மொழிகளில் வெளியிடப்பட்டிருந்தது. கலவையான விமர்சனங்களை பெற்ற வாத்தி பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பிவிட்டது. அதாவது, இதுவரை 100 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இந்த நிலையில், வாத்தி படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. 35 கோடி பட்ஜெட்டில் உருவான வாத்தி படத்தின் ஓடிடி ரைட்ஸை நெட்பிளிக்ஸ் கைப்பற்றியுள்ளது. அந்தவகையில், மார்ச் 17 ஆம் தேதி முதல் நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது. இன்னும் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் வாத்தி படத்தின் ஓடிடி ரிலீஸ் தனுஷ் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Nandhinipriya Ganeshan [IST]