OTT அப்டேட்ஸ் :

அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகி டாப்பில் சென்ற வாரிசு

அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகி டாப்பில் சென்ற வாரிசு Representative Image.

நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.   லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தில்  நடித்து வரும் விஜய் இதற்கு முன்பு நடித்த படம் வாரிசு. 

தில்ராஜு தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் விஜய் மூன்று அண்ணன் தம்பிகளில் ஒருவராக நடித்திருந்தார். அவர் கடைசி தம்பியாக நடித்திருந்த இந்த படத்தில் அன்பு, பாசம், குடும்பம் பற்றிய வசனங்கள் டிவி சீரியல்களை நினைவுபடுத்தின. ஆனால் குடும்பங்கள் படையெடுத்து வந்து பார்த்து படத்தை வெற்றிப்படமாக ஆக்கின

படத்திற்கான பாடல்கள் மற்றும் வசனத்தை தமிழில் விவேக் எழுதி இருந்தார். தமன் இசையமைத்திருந்தார். இந்தப் படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் மற்றும் பிவிபி சினிமா தயாரித்தது.

இந்தப் படத்தில் ராஷ்மிகா, ஷாம், பிரபு, சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஸ்ரீகாந்த், குஷ்பு, சங்கீதா, ஜெயசுதா, யோகி பாபு, ஸ்ரீமன், ஜான் விஜய், விடிவி கணேஷ், சஞ்சனா சாரதி, பரத் ரெட்டி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். பொங்கல் திருநாளை  முன்னிட்டு கடந்த மாதம் ஜனவரி 11ம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. இதன்கூடவே அஜித் நடித்த துணிவு படமும் களமிறங்கியது. 

இந்தச் சூழலில் வாரிசு படம் அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் வெளியாகி இருந்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழியில் இந்தப் படம் தற்போது ஓடிடி-யில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது. வரும் மார்ச் 8-ம் தேதி இந்தி மொழியில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வாரிசு படம் டாப் கியரில் சென்று கொண்டிருக்கிறதாம். அதிகம் பார்க்கப்பட்ட படங்கள் பட்டியலில் வாரிசு முதலிடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. 

Related Post :