
எழுத்தாளர் அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் காலங்கடந்து கொண்டாடப்பட்டுவருகிறது.

உண்மை சம்பவங்களையும், கற்பனையையும் கலந்து 60 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட பொன்னியின் செல்வன் நாவலை இயக்குநர் மணிரத்னம் திரைப்படமாக இயக்கியுள்ளார்.

இரண்டு பாகங்களாக உருவான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி 500 கோடி ரூபாய் வரை வசூலித்தது.

இப்படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஜெயராம், பிரபு என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர்.

இந்த நிலையில், பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாவது பாகம் வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இதற்கான ஆடியோ லாஞ்ச் சென்னை நேரு உள்விளையாட்டரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இவ்விழாவில் கமல் ஹாசன், சிம்பு உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். முதல் பாகம் ஆடியோ லாஞ்ச் போது த்ரிஷா பிங்க் கலர் ஷேரில் அழகு தேவதையாக ஜொலித்தார்.

அதேபோல், இந்த முறையும் ப்ளூ கலர் புடவையில் அழகாக வந்திருந்தார். தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இப்படி ஒவ்வொரு புரமோஷனுக்கும் த்ரிஷா அழகான காஸ்டியூம்களை தேர்ந்தெடுப்பதில் முக்கிய கவனம் செலுத்தி வருகிறார்.
Nandhinipriya Ganeshan March 30, 2023 & 15:22 [IST]