
புதிதாக கம்பெனி ஸ்டார்ட் பண்ணி, தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்தும் முயற்சியில், தமிழ் இறங்கியுள்ளார். இதனைக் கெடுக்க அர்ஜூன் தீட்டிய அடுத்த சதித்திட்டம் என்ன தெரியுமா..?

தமிழ், வீட்டை விட்டு வெளியேறி அவரத் குடும்பம் முன்னே உயர்ந்து காட்ட வேண்டும் என்று, புதிதாக கம்பெனி ஒன்றைத் திறக்கிறார். அந்தக் கம்பெனியைத் திறப்பதற்குள், தமிழைப் பாடாய் படுத்தி விட்டான் அர்ஜூன். பல சதித் திட்டங்களைத் தீட்டி, தமிழைக் கம்பெனி ஸ்டார்ட் பண்ண விடாமல் தடுத்தார். ஆனால், அதை அனைத்தையும் மீறி புதிய கம்பெனியைத் திறந்தார் தமிழ்

ஆனால், புது கம்பெனி திறப்பிற்கு தமிழ் எதிர்பார்க்காத விதமாய் தமிழ் அம்மா கோதை கம்பெனி திறப்பு விழாவிற்கு வந்தார். அதே நேரம், அர்ஜூனும் திறப்பு விழாவிற்கு வந்தான். இதற்கு அடுத்து, கம்பெனி முதல் ஆர்டரைக் கெடுக்க, அர்ஜூன், கார்த்திக்கின் மனதை மாற்றுகிறான். கார்த்திக்கும் எதோனு செய்டா எனக் கூறிவிடுகிறான்.

பிறகென்ன, அர்ஜூன் தனது வேலையைத் தொடங்குகிறான். தமிழ் ஆர்டர் எல்லாம் செய்து டெலிவர் செய்வதற்காக, வெளியில் வைத்து விட்டு, தமிழும் சரஸ்வதியும் உள்ளே செல்கின்றனர். அப்போது அங்கு வந்த ஒருத்தன் அந்த ஆர்டரின் மேல் ஆசிட்டை ஊற்றி விட்டுச் செல்கிறான்.

நமச்சி அதைத் தொடப் போகும் போது, தமிழ் தடுத்து, அதைத் தொடாத.. ஆசிட் ஊற்றி விட்டு சென்றிருக்கிறான் என்றான். பிறகு, செய்த ஆர்டரை எடுத்து வைத்துப் பார்த்த போது எல்லாம் கருகிப் போனது. ஆனால், இதெல்லாம் நடக்கும் போது தமிழின் ரியாக்ஷன் வித்தியாசமா இருந்தது.
Gowthami Subramani April 17, 2023 & 11:55 [IST]