
கன்னட மொழி திரைப்படங்கள் மற்றும் டிவி சீரியல்களில் நடித்து பிரபலமானவர்க் சம்பத் ஜே.ராம் (35). சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ஸ்ரீ பாலாஜி போட்டோ ஸ்டுடியோ வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றிருந்தது. மேலும், இவர் நடித்த அக்னி சாக்ஷி என்ற சீரியல் ரசிகர்கள் மத்தியில் ஃபேமஸான சீரியலாகும். கடந்த வருடம் தான் சம்பத்திற்கு திருமணம் நடைபெற்றிருந்தது. இந்த நிலையில், கடந்த 22ம் ஆம் தேதி நீலமங்கலா பகுதியில் உள்ள தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
என்ன காரணம் என்று தெரியாமல் நடிகர் சம்பத் திடீரென தற்கொலை செய்துக் கொண்டது ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினரிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில், சம்பத் தற்கொலை செய்துக் கொண்டதற்கான ஒரு முக்கிய காரணம் தெரியவந்துள்ளது.

அதாவது, கடந்த சில ஆண்டுகளாகவே திரைத்துறையில் போதிய வாய்ப்புகள் கிடைக்காமல் மிகுந்த மனஅழுத்தத்தில் சம்பத் இருந்து வந்துள்ளார். இக்கட்டான சூழ்நிலையை சமாளிக்க முடியாமலே இந்த விபரீத முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது, பிரபலங்கள் பலரும் அவரது இறப்பிற்கு இரங்கல் தெரிவித்துவருகின்றனர். சமீப காலமாகவே சின்னத்திரை நடிகர், நடிகைகள் தற்கொலை செய்துக் கொள்வது அதிகரித்து வருகிறது. இந்த விபரீத முடிவை எடுப்பதற்கு பல காரணம் இருந்தாலும், தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வாகாது என்பதே நிதர்சனமான உண்மை.
Nandhinipriya Ganeshan April 24, 2023 & 11:34 [IST]