
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் ஃபேமஸான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன், தம்பிகளின் பாசம் மற்றும் கூட்டு குடும்பம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு ஓடிக்கொண்டிருக்கும் இந்த சீரியல் தற்போது எக்கச்சக்கமான விறுவிறுப்பான தருணங்களுடன் நகர்ந்து வருகிறது. பலருக்கும் ஃபேவரட் சீரியலாக இருக்கும் இந்த சீரியலின் கதையில், கூட்டு குடும்பம் என்றால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் என்று காட்டிவிட்டு இப்போது மனக்கசப்புடன் ஆளுக்கு ஒருபக்கம் பிரிந்து இருக்கின்றனர்.

பிரிந்த அண்ணன்-தம்பிகள் மீண்டும் இணைவார்களா என்று ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் தற்போது இந்த சீரியலில் இருந்து சரவணன் (கண்ணன்) விலக போவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. விஜே தீபிகா வெளியிட்ட புகைப்படத்தின் காரணமாக இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது, இந்த சீரியலில் ஐஸ்வர்யா கேரக்டரில் நடித்து வரும் விஜே தீபகா தனது சோசியல் மீடியா பக்கத்தில், தமிழும் சரஸ்வதியும் சீரியலில் கார்த்தியாக நடித்து வரும் நவீன் வெற்றியுடன் எடுத்துக் கொண்ட படத்தைப் பகிர்ந்து, ’சுவாரஸ்யமான ஒன்று வரவிருக்கிறது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே தற்போது நடிகர் சரவண விக்ரமுக்கு பல பட வாய்ப்புகள் வந்திருப்பதால், அவர் சீரியலை விட்டு விலகியிருப்பதாகவும், அவருக்கு பதில் இனி தமிழும் சரஸ்வதியும் சீரியலில் நடிக்கும் நவீன், கண்ணன் கதாபாத்திரத்தில் நடிக்கயுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு முன்னாடி, சாய் காயத்திரி திடீரென்று இந்த சீரியலில் இருந்து விலகியதால், அவருக்கு பதிலாக வேறு நடிகை வரப்போவதாகவும் தகவல்கள் வெளியானது. அந்தவகையில் இந்த கேரக்டரில் ஏற்கனவே ஐஸ்வர்யாவாக நடித்த விஜே தீபிகா மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார். ஒருவழியாக சீரியலில் ஒரு கட்சிதமான ஜோடி சேர்ந்திருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்த வேளையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
Nandhinipriya Ganeshan April 20, 2023 & 15:35 [IST]