
அஜீத்குமார் இரட்டை வேடங்களில் நடித்து வெளியான படம் 'வாலி'. இப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு என்ட்ரீ கொடுத்தவர் நடிகை ஜோதிகா. பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக மாறினார்.
அதன்பிறகு, சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் இணைந்து நடித்த காக்க காக்க திரைப்படத்தின் மூலம் இருவருக்கும் இடையே காதல் மலரவே, இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இப்போது தமிழ் சினிமாவில் இருக்கும் கியூட் ஜோடிகளில் இந்த ஜோடியும் ஒன்று.
பொதுவாகவே, நடிகர்கள் மற்றும் நடிகைகள் திருமணமான பிறகு திரைப்படங்களில் நடிக்கும்போது பல கண்டிசன்கள் போடுவது வழக்கம். ஆனால், ஜோதிகா திருமணத்துக்கு பிறகு திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான 36 வயதினிலே என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு ரீ என்ட்ரி கொடுத்தார்.

அதைத்தொடர்ந்து பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். அதுமட்டுமல்லாமல் ஜோதிகா, சூர்யா இணைந்து 2D Entertainment தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பல படங்களை தயாரித்து வெற்றி ஜோடிகளாகவும் வலம் வருகின்றனர்.
காதலிக்க ஆரம்பத்ததிலிருந்தே ஜோதிகா யாருடன் நடிப்பதாக இருந்தாலும் சூர்யாவிடம் கேட்டு தான் நடிப்பாராம். அந்தவகையில், பிரபல மூன்றெழுத்து நடிகருடன் நடிக்க கமிட்டான ஜோதிகாவை அந்த நடிகருடன் நடிக்க விடாமல் சூர்யா தடுத்துள்ளார்.
திருமணமான சமயத்தில் 5 படங்களில் கமிட்டான ஜோதிகா அனைத்து படங்களையும் உதறி தள்ளிவிட்டாராம். அதில் பிளாக்பாஸ்டர் ஹிட் அடித்த யாராடி நீ மோகினி படமும் ஒன்று. இதிலிருந்து யாரென்று உங்களுக்கும் புரிந்திருக்கும். நாங்க சொல்லல பா வெளியில பேசிக்கிறாங்க.
Nandhinipriya Ganeshan March 09, 2023 & 13:31 [IST]