
நடிகர் தனுஷ் மற்றும் மீனா இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் தனது யூடியூப் பக்கத்தில் செம்மையாக கொளுத்திப்போட்டுள்ளார். இது குறித்த விவரமான தகவல் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

ஹாலிவுட் வரை தமிழ் நடிகர்களின் பெருமையை கொண்டு சென்றவர் தனுஷ். சமீப வருடங்களாக சமூகத்திற்கு நல்ல கருத்துக்களை தெரிவிக்கும் வகையில் படங்களை நடித்து வருகிறார். இவர் 2004 ஆம் ஆண்டு நம்ப சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்துக் கொண்டு மகிழ்ச்சியாக தங்கள் வாழ்க்கையை தொடங்கினர். சுமார் 18 ஆண்டுகள் தங்கள் வாழ்க்கையை ஒன்றாக சேர்ந்து வாழ்ந்த தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விவாகரத்து செய்யப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரபூர்வமான தகவல் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.

இப்படி இருக்கையில் மறுபக்கம் சில மாதங்களுக்கு முன்னர் நடிகை மீனாவின் கணவன் உயிரிழந்து விட்டார். இந்த இரண்டு விஷயங்களையும் சேர்த்து தமிழக மக்களை கடுப்பேத்தும் வகையில் விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் ஒரு சம்பவத்தை செய்துள்ளார். அதாவது மனைவி இல்லாமல் தனியாக இருக்கும் தனுஷ் மற்றும் கணவனை இழந்த மீனா இருவரும் திருமணம் செய்துக் கொள்ளப் போகிறார்கள் என்று கொளுத்திப் போட்டுள்ளார். மேலும் இருவருமே இளம் வயதானவர்கள் என்பதால் அவர்கள் திருமணம் செய்து கொள்வதிலும் எந்த தவறும் இல்லை என்றும் கூறியுள்ளார்.

சரி இதுவே மக்களை கடுப்பேத்தியுள்ளது இத்துடன் அவர் நிறுத்தி இருந்திருக்கலாம். ஆனால் அவர் அதையும் தாண்டி இருவருக்கும் பாடி டிமாண்ட் இருக்கும் என்றும் கூறியுள்ளார். இது தனுஷ் ரசிகர்கள் மட்டும் அல்லாது அனைத்து மக்களையுமே கொந்தளிக்கச் செய்தது. உண்மை எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் ஒரு தனி நபரின் பர்சனல் விஷயங்களைப் பற்றி இப்படி அவதூறாக பேசுவது மிகவும் கண்டிக்கத்தக்க விஷயம் என்று பலரும் தங்கள் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர்.
Priyanka Hochumin March 20, 2023 & 14:58 [IST]