
சென்னை: பூவே உனக்காக படத்தின் நாயகி சங்கீதாவின் காதல் கதை குறித்து தெரியவந்திருக்கிறது. விக்ரமன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான படம் பூவே உனக்காக. அந்தப் படம் கடந்த 1996ஆம் வருடம் வெளியாகி விஜய்யின் கரியரில் மிகப்பெரிய மாற்றத்தை கொடுத்தது. படத்தில் நாகேஷ், நம்பியார், மலேசியா வாசுதேவன், சார்லி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும்.
அவர்களில் தனித்து தெரிந்தவர் சங்கீதா. கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட சங்கீதா பூவே உனக்காக படத்துக்கு முன்பாகவே தமிழில் அறிமுகமாகிவிட்டார். ராஜ்கிரண் நடித்த எல்லாமே என் ராசா படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பிறகு கேப்டன் மகள், நாங்கள் என பல படங்களில் நடித்திருந்தாலும் பூவே உனக்க்காக படம்தான் அவருக்கு பெரும் அடையாளத்தை பெற்றுக்கொடுத்தது. அதில் துறுதுறுவென்று நடித்து அனைவரையும் கவர்ந்தார்.
அந்தப் படத்துக்கு பிறகும் பொங்கலோ பொங்கல், ரத்னா, கும்பகோணம் கோபாலு, எதிரும் புதிரும், பூ மனமே வா உள்ளிட்ட படங்களில் நடித்தார். கரியரின் உச்சத்தில் இருந்தபோதே ஒளிப்பதிவாளர் சரவணன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அந்த சரவணன்தான் பூவே உனக்காக படத்தின் ஒளிப்பதிவாளர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் படத்துக்கு மட்டுமின்றி சங்கமம், வல்லரசு,மாயி, வாஞ்சிநாதன், சூர்ய வம்சம், செல்வா, ப்ரியமான தோழி,திருப்பாச்சி உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருக்கிறார்.

அதுமட்டுமின்றி சிம்புவை வைத்து சிலம்பாட்டம் படத்தையும் இயக்கினார். இந்நிலையில் இவர்களது காதல் கதை குறித்து தெரியவந்திருக்கிறது. அதாவது, “பூவே உனக்காக படத்தில் பணியாற்றியபோது இருவரும் அறிமுகமாகியிருக்கிறார்கள். அப்போது ஓரளவு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அதற்கு பிறகு ஒருவருடம் இருவருமே சந்தித்துக்கொள்ளவில்லை. இந்தச் சூழலில் சரவணன் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ஆஹா படத்தின் படப்பிடிப்பும், சங்கீதா நடித்த வேறு ஒரு படத்தின் படப்பிடிப்பும் ஒரே ஸ்டூடியோவில் நடந்திருக்கிறது.
அப்போது மீண்டும் இருவரும் சந்தித்துக்கொண்டனர். ஆனால் இந்த முறை அந்த சந்திப்பு தொடர்ந்து நடந்திருக்கிறது. அப்போது இருவருக்கும் ஏற்பட்ட பழக்கம் புரிதல் காரணமாக காதல் மலர்ந்திருக்கிறது. அதன் பின் இருவீட்டார் சம்மதத்துடன் 2000ஆம் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு தேஜஸ்மி என்ற மகள் இருக்கிறாள். இந்தத் தகவலை இருவரும் ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டனர்.
Aruvi July 08, 2023 & 17:27 [IST]