
கடந்த 2011 ஆம் ஆண்டு தனுஷ், ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியான படம் '3'. இப்படத்தில் இசையமைத்ததன் மூலம் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். முதல் படத்திலேயே அனைத்து பாடல்களும் ஹிட் அடித்ததால், தற்போது பல முன்னணி நடிகர்களுக்கு இசையமைத்து பிரபல இசையமைப்பாளராக வலம் வருகிறார்.
ஏற்கனவே அனிருத் பிரபல பாடகி மற்றும் நடிகையான ஆண்ட்ரியாவுடன் நெருக்கமாக இருப்பது போன்ற போட்டோஸ் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த நிலையில், இன்னொரு செய்தி வெளியாகியுள்ளது. அதாவது, அனிருத் அதிகமாக இரவு பார்ட்டி நடத்துவாராம்.
அதில், அவர் மது அருந்திக்கொண்டு சில நடிகைகளுடன் நெருக்கமாக இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பாடகி ஜோனிட காந்தியுடன் அனிருத் ரிலேஷன்ஷிப்பில் இருந்தாக பத்திரிகையாளர் பயில்வான் கூறியுள்ளார்.
Nandhinipriya Ganeshan March 28, 2023 & 18:59 [IST]