
தெலுங்கு நடிகர் சீரஞ்சீவியின் தம்பி நாக பாபுவின் மகள்தான் நடிகை நிஹாரிகா. இவர் தெலுங்கில் ’ஒக்க மனசு’, ‘ஹேப்பி வெட்டிங்’, ‘சைரா நரசிம்ம ரெட்டி’ போன்ற படத்திலும், தமிழில் விஜய் சேதுபதியுடன் ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்லு’ போன்ற படங்களிலும் நாயகியாக நடித்திருந்தார்.
தெலுங்கில் கொடிக்கட்டி பறந்து வரும் சிரஞ்சீவி குடும்பத்தின் வாரிசுகளில் ஒருவராக வலம் வரும் நடிகை நிஹாரிகா, ‘பிங்க் எலிபெண்ட் பிக்சர்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் தயாரிப்புகள் மற்றும் ஒடிடி நிறுவனங்களிலும் நிகழ்ச்சி தயாரிப்புகளிலும் கவனம் செலுத்தி வரும் நிஹாரிகா, 2020 தனது குடும்ப நண்பரும் பிசினஸ்மேனும் ஆன ‘சைதன்யா’ என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.

இந்த திருமணம் முழுக்க முழுக்க நிஹாரிகா குடும்பத்தினர் ஏற்பாடு செய்த திருமணமாகும். நடிகர் சிரஞ்சீவி குடும்பத்தின் ஒட்டுமொத்த திரை வாரிசுகளாலும், மிகவும் ஜெகஜோதியாக நிஹாரிகாவின் திருமணம் கோலாகலத்துடன் நடத்தப்பட்டது. கடந்த ஆண்டின் முடிவிலே அரசல் புரசலாக அடிப்பட்டது இவர்களின் விவாகரத்து செய்தி. அந்த செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமால, தற்போது திருமணமாகி மூன்றே ஆண்டுகளில் தனது மணமுறிவுவை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் நடிகை நிஹாரிகா.
இனி முழுக்க முழுக்க தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்திலும் நடிப்பிலும் கவனம் செலுத்த போவதாக கூறியிருக்கும் நிஹாரிகா தற்போது ஜீ5 நிகழ்ச்சி தயாரிப்பிலும், ஹாட்ஸ்டாரின் வெப் சீரிஸ் ஒன்றிலும் நடித்து வருகிறார்.
Chandrasekar July 05, 2023 & 13:21 [IST]