
தமிழ் சினிமாவில் ஒரு காலக்கட்டத்தில் இந்த நடிகையின் கால்ஷீட் இருந்தால்தான் நான் தருவேன் என ஹீரோக்களே சொல்லி தயாரிப்பாளர்கள் நடிகையின் பின் கால்ஷீட்டுக்காக அலைந்த காலம் இருக்கிறது. அப்படி இருந்தவர் கொஞ்சம் வயதானதும் சீனியர் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார். தெலுங்கு பக்கம் ஒதுங்கி கவர்ச்சிக் கடலாகவும் மாறினார்.
பெரிய நடிகர்களுடன் அட்ஜஸ்ட் பண்ணி படங்கள் பண்ணிய ஹீரோயினுக்கு தெலுங்கில் வசமாக சிக்கினார் இளம் ஹீரோ ஒருவர். தயாரிப்பாளரின் மகனான இவரின் எல்லா படங்களிலும் நடிகை ஏதாவது ஒரு வகையில் கலந்துகொள்வார். வீட்டில் கண்டித்தும் அவர் கேட்கவில்லையாம்.
இதுதான் சரியான தருணம் என நினைத்து நடிகையும் வீடெல்லாம் எடுத்து தங்கி இளம் நடிகருடன் தன்னை மறந்து வாழ்க்கை நடத்தினாராம். வயது ஏற ஏற படங்களின் வெற்றியும் குறைய, ஹீரோவின் படங்களிலிருந்து படிப்படியே விலக்கப்பட்டார்.
கணவன் மனைவியாகவே வாழ்ந்தவர்களுக்கு இடையே திடீர் விரிசல். நடிகையின் வீட்டுக்கு வருவதையே நிறுத்திவிட்டாராம் ஹீரோ. ஆண்ட்டி ஹீரோ என பலரும் கேலி செய்யவே இவரும் இனி இதெல்லாம் வேலைக்கு ஆகாது நல்ல படங்களில் நடித்து லைஃபில் செட்டில் ஆக வேண்டும் என்கிற முடிவுக்கு வந்துவிட்டாராம். நடிகைக்கு சொல்லாமலே அவர் மும்பை, ஹைதராபாத் என பல படங்களில் ஒப்பந்தமாகி 5 வருடங்களில் மிகப் பெரிய மார்க்கெட்டை உருவாக்கிக் கொண்டார் ஹீரோ.
அவரை நம்பி ஏமாந்து போயிருக்கிறாராம் நடிகை. ஹீரோவிடம் கேட்டால் அவர் கஷ்டப்படும்போது நான் உதவி செய்தேன். அவர் எனக்கு சகோதரி மாதிரி என நண்பர்களையே ஏமாற்றுகிறாராம். இப்போது விசயம் என்னவென்றால் நடிகை மீண்டும் தமிழுக்கு வந்து சில படங்களில் நல்ல கதாபாத்திரங்களையும் எடுத்து நடித்துக் கொண்டிருக்கிறாராம்.
Editorial Desk February 23, 2023 & 13:54 [IST]