OTT அப்டேட்ஸ் :

அவரு இப்போதைக்கு இயக்குநர செலக்ட் பண்றமாதிரி தெரியல!

அவரு இப்போதைக்கு இயக்குநர செலக்ட் பண்றமாதிரி தெரியல!Representative Image.

ஒரே நேரத்துல ரெண்டு நடிகர்களும் ஃபீல்டுக்கு வந்தாலும் போட்டி நடிகர் படத்துக்கு படம் தாவி தாவி இப்ப நம்மள விட 5 லீடிங்க்ல போயிட்ருக்காரு, நாமளும் தாவி தாவி ரெண்டு ரெண்டா பண்ணி சீக்கிரமா அவர முந்தனும்னு கணக்கு போட்ட நடிகர் டெரக்டர் அமையாம இருக்கார்னு பாவமா இருக்கு. ஆனா அப்படி டெரக்டர் அமையாம போறதுக்கு காரணமும் அவர்தான்னு குண்டத் தூக்கி போடுறாங்க. 

ஆமாங்க இப்ப வர அப்டேட் எதுவும் வராம இருக்கறதுக்கான காரணமே அந்த டாப் நடிகர்தானாம். காதலர் தினத்த முன்னிட்டு இன்னிக்கு அப்டேட் விடலாம்னு காத்திருந்ததாம் அந்த தயாரிப்பு நிறுவனம். ஆனா இயக்குநர கன்பாஃர்ம் பண்ணாம அந்த நடிகர் இழுத்தடிக்கிறாராம். 

போட்டி போட்டியாத்தான் இருக்கணும்னு நாம நினச்சிட்டு இருக்க , அவருக்கு போட்டியெல்லாம் வேண்டாம் தான் தனியாவே பயணிச்சிக்குறேன்னு சொல்றாராம். இவங்கள முட்டி மோத வச்சி கல்லா கட்டலாம்னு நினச்சிட்ருக்குற பட நிறுவனத்துக்கு ஏமாற்றமா போயிடிச்சாம். 

டாப் நடிகர் ரசிகர்கள் மேல நிறைய அன்பு செலுத்துறவரு. அவருக்கு எதிர் தரப்புல இருக்குற போட்டி நடிகருக்கும் ரகசியமா நட்பு இருக்குன்னும் சொல்றாங்க. ஆனா முன்ன மாதிரி இப்ப பேசிக்கிறது இல்லன்னும், ஆனா ரெண்டு பேரோட மனைவி மார்களும் பேசிக்குறாங்கன்னும் ஒரு தகவல் கோலிவுட்டுல சுத்திட்டு இருக்கு. சரி இப்ப என்னன்னா தலைவரு பெரிய திட்டத்தோட இருக்காராம். அது முடிஞ்சப்றம்தான் படத்துக்கு ஓகே சொல்வாராம். அப்ப ரசிகர்களுக்கு இப்போதைக்கு அப்டேட் இல்லியாமா?

Related Post :