OTT அப்டேட்ஸ் :

திருமணம் எப்போ என கேட்டு அனத்தும் விஜய் தாய்.. எப்போ தமன்னா க்ரீன் சிக்னல்?

திருமணம் எப்போ என கேட்டு அனத்தும் விஜய் தாய்.. எப்போ தமன்னா க்ரீன் சிக்னல்?Representative Image.

மும்பை: தமன்னாவின் காதலரும், நடிகருமான விஜய் வர்மா திருமணம் குறித்து பேசியிருக்கிறார்.

பாலிவுட்டில் 2005ஆம் ஆண்டு சந்த் சா ரோஷன் செக்ரா படத்தின் திரையுலகில் அறிமுகமானவர் தமன்னா. அதனையடுத்து தெலுங்கில் ஸ்ரீ என்ற படத்தின் மூலம் எண்ட்ரி கொடுத்தார். ஆனால் இரண்டு படங்களும் அவருக்கு சரியான அடையாளத்தை பெற்றுக்கொடுக்கவில்லை. இந்தச் சூழலில் 2006ஆம் ஆண்டு கேடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நுழைந்தார் தமன்னா. முதல் படத்திலேயே நெகட்டிவ் கேரக்டரில் நடித்ததால் ஓரளவு கவனம் பெற்றார்.

தமிழில் வியாபாரி, கல்லூரி ஆகிய படங்களில் நடித்தார். இவற்றில் கல்லூரி படம் ஹிட்டாகி நல்ல நடிகை என்ற பெயரை தமன்னாவுக்கு பெற்றுக்கொடுத்தது. அதனைத் தொடர்ந்து படிக்காதவன், அயன், ஆனந்த தாண்டவம், சுறா, பையா, சிறுத்தை, தில்லாலங்கடி, வீரம் ஆகிய படங்களில் நடித்து தமிழின் முன்னணி நடிகையாக வலம் வர ஆரம்பித்தார்.

இதனையடுத்து ஹிந்தியில் அவர் நடித்த ஹிம்மத்வாலா, எண்டெர்டெயின்மெண்ட், ப்ளான் ஏ ப்ளான் பி உள்ளிட்ட படங்கள் ஓரளவு கவனத்தை அவர் பக்கம் திருப்பியது. சூழல் இப்படி இருக்க ஜீ கர்தா என்ற வெப் சீரிஸில் நடித்தார். அதில் கவர்ச்சி கொஞ்சம் தூக்கலாகவே இருந்தது. ஹாலிவுட்டில் நடிப்பதற்காகத்தான் அவர் இவ்வாறு கவர்ச்சி காட்டுகிறார் என பலர் பேச அதை தமன்னா மறுத்து; கதைக்கு தேவைப்பட்டதால் நடித்தேன் என விளக்கம் அளித்தார். 

அதேபோல் சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான லஸ்ட் ஸ்டோரிஸ் 2விலும் கவர்ச்சியாகவே நடித்திருந்தார். தமிழில் அவர் ஜெயிலர் படத்தில் நடித்திருக்கிறார். படமானது ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகிறது. இதற்கிடையே லஸ்ட் ஸ்டோரிஸ் 2வில் தனக்கு ஜோடியாக நடித்த விஜய் வர்மாவை காதலிக்க ஆரம்பித்தார் தமன்னா. அதனை சமீபத்தில்தான் அவர் உறுதி செய்திருந்தார். இந்தச் சூழலில் திருமணம் குறித்து சமீபத்தில் பேசிய விஜய் வர்மா, “நான் மார்வாடி சமூகத்தை சேர்ந்தவன். எங்கள் சமுதாய பையன்களுக்கு 16 வயது வந்தாலே திருமண வயது வந்துவிட்டது என நினைப்பார்கள். 

அதனால் திருமண  பேச்சு ஏற்கனவே துவங்கி, அடங்கிவிட்டது. நான் திருமண வயதை தாண்டிவிட்டதால் அந்த பேச்சு அடங்கியது. மேலும் நான் நடிகராகிவிட்டேன். அதனால் யாரும் அது பற்றி பேசவில்லை. என் அம்மா இன்னும் திருமணம் பற்றி கேட்டுக்கொண்டே இருக்கிறார். ஒவ்வொரு முறை போன் செய்யும்போதும் கல்யாணம் பற்றி பேசுவார் அம்மா. நான் அதற்கு பதில் அளிக்காமல் பேச்சை மாற்றிவிடுவேன்” என்றார். இதனை பார்த்த ரசிகர்கள் திருமணத்துக்கு எப்போ தமன்னா க்ரீன் சிக்னல் கொடுப்பீங்க என கமெண்ட்ஸ் மூலம் கேள்வி எழுப்பிவருகின்றனர்.

Related Post :