
சென்னை: தமிழில் சூப்பர் டூப்பர் ஹிட்டான படம் ஒன்றில் ஐஸ்வர்யா ராய்தான் முதலில் நடித்திருக்க வேண்டியதாக புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.
உலக அழகி பட்டம் வென்ற ஐஸ்வர்யா ராய் மணிரத்னம் இயக்கத்தில் தமிழில் இருவர் படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அந்தப் படம் சரியாக போகாவிட்டாலும் அடுத்தடுத்து அவருக்கு ஹிந்தியில் வாய்ப்புகள் குவிந்தன. இதன் காரணமாக டாப் நடிகையாக உயர்ந்தார் அவர். அந்த சமயத்தில் சல்மான் கானுடன் காதலில் விழுந்த ஐஸ்வர்யா மூன்று வருடங்களுக்கு பிறகு அந்த உறவிலிருந்து வெளியே வந்தார்.
தமிழில் அறிமுகமானாலும் கோலிவுட்டில் செலக்ட்டிவ்வான படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதை அவர் வழக்கமாக வைத்திருக்கிறார். அதன்படி ஷங்கர் இயக்கத்தில் ஜீன்ஸ், எந்திரன், ராஜீவ் மேனன் இயக்கத்தில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், மணிரத்னம் இயக்கத்தில் ராவணன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். கடைசியாக அவர் பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதற்கிடையே அபிஷேக் பச்சனை காதலித்து திருமணமும் செய்துகொண்டார்.

பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா ராயின் நடிப்பை பார்த்த ரசிகர்கள் அதிகம் தமிழ் படங்களில் அவர் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் குஊற ஆரம்பித்திருக்கின்றனர். இந்தச் சூழலில் சூப்பர் டூப்பர் ஹிட்டான ஜோடி படத்தில் ஐஸ்வர்யா ராய்தான் முதலில் நடித்திருக்க வேண்டியது என தெரியவந்திருக்கிறது.
ஜோடி படத்தின் இயக்குநர் ப்ரவீன் காந்த் முதலில் ஐஸ்வர்யா ராயைத்தான் கமிட் செய்ய திட்டமிட்டிருந்தாராம். ஆனால் ஏதோ காரணத்தால் ஐஸ்வர்யா ராயால் நடிக்க முடியவில்லையாம். இதனையடுத்துதான் சிம்ரன் அந்தப் படத்தில் கமிட்டாகியிருக்கிறார் என கூறப்படுகிறது. ஜோடி படத்தில் பிரசாந்த்துடன் ஜோடி சேர்ந்திருக்க வேண்டிய ஐஸ்வர்யா ராய் அதன் பிறகு ஜீன்ஸ் படத்தில் ஜோடியாக நடித்தது குறிப்பிடத்தக்கது.
Aruvi July 21, 2023 & 19:14 [IST]