
தன்னுடைய வருங்கால மனைவி குறித்து முதல் முறையாக மனம் திறந்து பேசியிருக்கிறார் விஜய் டிவி பிரபலம் நாஞ்சில் விஜயன்.
மக்கள் மத்தியில் மவுசுடன் இருக்கும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் திறமையானவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். அப்படியாக நம்முடைய சிவகார்த்திகேயன் தொகுப்பாளராக இருந்த அது இது எது நிகழ்ச்சியில் ‘சிரிச்சா போச்சு’ என்னும் சுற்றுக்கு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அதில் ரோபோ ஷங்கர், வடிவேல் பாலாஜி, பழைய ஜோக் தங்கதுரை போன்ற முன்னணி காமெடி நடிகர்கள் பங்கேற்றுள்ளனர். அவர்களுள் ஒருவர் தான் நாஞ்சில் விஜயன். இவர் பெரும்பாலும் பெண் வேடத்தில் நடித்து மக்களை மகிழ்விப்பார்.
நாஞ்சில் விஜயனுக்கு சமீபத்தில் மிகவும் எளிமையாக அவரின் வீட்டில் நிச்சியதார்த்தம் நடைபெற்றுள்ளது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அதனைத் தொடர்ந்து நாஞ்சில் விஜயன் திருமணம் செய்யப்போகும் பெண் நண்பர்கள் மூலமாக அறிமுகம் செய்யப்பட்டவராம். மேலும் அவர்களுக்கு வரும் செப்டம்பர் 3 ஆம் தேதி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மண்டபத்தில் திருமணம் நடைபெறுவதாக கூறப்படுகிறது.
Priyanka Hochumin July 27, 2023 & 19:15 [IST]