
சின்னத்திரையில் லொள்ளு சபா மூலம் அறிமுகமாகி பின்னர் சிம்பு மூலம் திரைத்துறைக்குள் வந்தவர் நடிகர் சந்தானம். காமெடி நடிகராக அறிமுகமாகி அதகளம் செய்தவர். அவரது டைமிங் காமெடிகள் அனைத்துமே வயிறு வலிக்க சிரிக்க வைத்தவை. குறிப்பாக கவுண்டமணி எப்படி டைமிங்கில் அடுத்தவர்களுக்கு பல்பு கொடுப்பாரோ அதே ஃபார்முலாவை சந்தானம் ஃபாலோ செய்து சிரிப்பு பட்டாசை பற்ற வைத்தார்.
ஒருகட்டத்தில் காமெடியிலிருந்து விலகி கதாநாயகனாக நடித்தார் சந்தானம். அவர் ஹீரோவாக நடித்த பெரும்பாலான படங்கள் பெரிதாக ஓடவில்லை. இருந்தாலும் ஹீரோவாக ஒரு ஹிட்டாவது கொடுத்துவிட வேண்டும் என்பதில் முனைப்போடு இருக்கிறார். அவர் நடிப்பில் கடைசியாக குலு குலு படம் வெளியானது. அப்படமும் கலவையான விமர்சனத்தையே பெற்றது. இந்நிலையில் சந்தானம் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில்,

“எனக்கு ராம்குமார் என்ற நண்பர் இருக்கிறார்.. ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் அவரை இன்ஸ்பிரேஷனாக வைத்துதான் பார்த்தா கதாபாத்திரத்தில் நடித்தேன். ராம்குமார் பேசுவது வேடிக்கையாகவும், சம்பந்தமில்லாமலும் இருக்கும். சமீபத்தில்கூட ஒரு முறை பேசும்போது என்னடா காமெடி எல்லாம் பண்ற, எனக்கு சிரிப்பே வரல கொஞ்சம் இம்ப்ரூவ் பண்ணு என என்னை கலாயத்துவிட்டு போய்க்கொண்டே இருந்தார்.
ஒருமுறை என்னை டேய் புடலங்கா என சொல்லிவிட்டார். உடனே அவரது தந்தை ஏன் டா இப்டி கெட்ட வார்த்தைல திட்டுற என கேட்டுவிட்டார். அதேபோல் ஒருமுறை ஃபோனில் வீட்ல சாம்பார், ரசம், பூசணிக்காய் டா செம ட்ரீட் என்றார். நான் உடனே இதுல என்னடா ட்ரீட் என நினைத்துக்கொண்டேன். ஒருமுறை நான் அவனை பார்த்து, உன்னை வைத்து ஒரு படமே பண்ணிவிட்டேன். இன்னும் நீ மாறாமல் இருக்கியே டா” என சொல்லியேவிட்டேன் என்றார்.
Aruvi July 22, 2023 & 17:37 [IST]