OTT அப்டேட்ஸ் :

ரஜினிதான் எப்போதும் மாஸ் போல.. 15 நொடிகளில் காலியான ஜெயிலர் இசை வெளியீட்டு விழா பாஸ்கள்

ரஜினிதான் எப்போதும் மாஸ் போல.. 15 நொடிகளில் காலியான ஜெயிலர் இசை வெளியீட்டு விழா பாஸ்கள்Representative Image.

சென்னை: ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கான பாஸ்கள் 15 நொடிகளில் தீர்ந்துவிட்டன. இதனால் ரஜினி ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்திருக்கிறார் ரஜினிகாந்த். அவருடன் மோகன்லால், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். மேலும் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகிபாபுவும் நடித்திருக்கின்றனர். பான் இந்தியா படமாக ஆகஸ்ட் பத்தாம் தேதி ஜெயிலர் ரிலீஸாகவிருக்கிறது. படத்தின் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

படத்திலிருந்து காவாலா, ஹுக்கும் ஆகிய இரண்டு சிங்கிள்கள் ரிலீஸாகியிருக்கின்றன. காவாலாவில் தமன்னா ஸ்கோர் செய்ய இரண்டாவது சிங்கிளான ஹுக்கும் முழுக்க முழுக்க ரஜினிகாகவே உருவாக்கப்பட்டிருந்தது. முக்கியமாக, அடுத்த சூப்பர் ஸ்டார் என்பவர் யாருமில்லை ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிதான் என்பதை குறிக்கும் விதமாக பாடல் வரிகள் இருந்தன. அந்த வரிகளை எழுதிய பாடலாசிரியர் சூப்பர் சுப்புவை ரஜினி பாராட்டியிருந்ததும் இங்கு கவனிக்கத்தக்கது..

ரஜினிதான் எப்போதும் மாஸ் போல.. 15 நொடிகளில் காலியான ஜெயிலர் இசை வெளியீட்டு விழா பாஸ்கள்Representative Image

இந்தச் சூழலில் ஜெயிலர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா ஜூலை 28ஆம் தேதி சென்னையில் இருக்கும் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவிருக்கிறது. இதில் படக்குழுவினர் கலதுகொள்ளவிருக்கின்றனர். ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினியின் பேச்சு எப்போதும் மாஸாக இருக்கும் என்பதால் ஜெயிலர் விழாவில் என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் கலந்துகொள்வதற்கு தோதாக படக்குழு ஒரு ஏற்பாட்டை செய்துள்ளது. அதன்படி ரசிகர்களுக்கு 1000 இலவச பாஸ்கள் வழங்கப்படும். இன்று மதியம் 1 மணிக்கு Http://Jailer.Sunpictures.in/ என்ற இணையத்தளத்தின் மூலம் பாஸ்களை பதிவு செய்துகொள்ளலாம அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சரியாக 1 மணிக்கு பாஸுக்கான பதிவு தொடங்கியது. அது தொடங்கிய வெறும் 15 நொடிகளில் அனைத்து பாஸ்களும் காலியாகிவிட்டன

Related Post :