
தந்தை மீது அதிகளவு பாசம் வைத்திருந்த ஹாலிவுட் பிரபலம், தந்தை மரணித்த ஒரு வாரத்தில் அவரும் மரணமடைந்தார். யார் அந்த பிரபலம், எப்படி இறந்தார் குறித்த விவரங்களைப் பார்க்கலாம்.
பிரபல HBO தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'Euphoria' நெடுந்தொடர் மூலம் மக்களின் கவனத்தை பெற்றவர் ஆங்கஸ் க்ளவுட். வளர்ந்து வரும் நடிகரான இவருக்கு 25 வயதாகிறது. இவரின் தந்தை திடீரென கடந்த வாரம் உயிரிழந்து விட்டார். இதனால் மிகவும் துரியத்தில் இருந்த ஆங்கஸ் யாரிடமும் பேசாமல் தனிமையில் இருந்துள்ளார்.
தந்தை இறப்பின் தாக்கம் அவரை பெரும் மன அழுத்தத்திற்கு கொண்டு சென்றுள்ளது. குடும்பத்தினரும் அவரை தொந்தரவு செய்யாமல் பார்த்து கொண்டனர். இருப்பினும் உச்சக்கட்டத்திற்கு போன இவரின் மன கவலை ஆங்கஸை மரணத்திற்கு கொண்டு சென்று விட்டது. யாரும் எதிர்பார்க்காத வகையில் 31 ஜூலை 2023 அன்று ஆங்கஸ் க்ளவுட் மரணமடைந்தார்.
Priyanka Hochumin August 05, 2023 & 12:45 [IST]