OTT அப்டேட்ஸ் :

அலப்பற கெளப்புங்க.. ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழா.. வெளியானது அறிவிப்பு

அலப்பற கெளப்புங்க.. ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழா.. வெளியானது அறிவிப்புRepresentative Image.

சென்னை: ஜெயிலர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடக்கும் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்திருக்கிறார். படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகவிருக்கும் சூழலில் படத்தில் இடம்பெற்ற காவாலா என்ற முதல் சிங்கிள் சில வாரங்களுக்கு முன் வெளியானது. அந்தப் பாடலில் தமன்னா வேற லெவலில் நடனம் ஆடி அட்டகாசமாக ஸ்கோர் செய்துவிட்டார். அதனையடுத்து ஹுக்கும் என்ற இரண்டாவது சிங்கிள் வெளியானது.

இதனையடுத்து படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா எப்போது நடைபெறும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருக்க ஆரம்பித்தனர். நேற்று ஒரு வீடியோவை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டு விரைவில் ஆடியோ ரிலீஸ் விழா நடக்கும் என தெரிவித்திருந்தது. இந்நிலையில் ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழா குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. அதன்படி விழாவானது ஜூலை 28அம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலப்பற கெளப்புங்க.. ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழா.. வெளியானது அறிவிப்புRepresentative Image

அதுதொடர்பாக வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த வீடியோவின் பின்னணியில் ரஜினிகாந்தின் குரல் ஒலித்துக்கொண்டிருக்கிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. மேலும் ஆடியோ வெளியீட்டு விழாவில் இதில் மோகன் லால், சிவராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆடியோ வெளியீட்டு விழாவில் எப்போதுமே ரஜினிகாந்த்தின் பேச்சில் அனல் பறக்கும். அவரது பேச்சுதான் அடுத்த சில நாட்களுக்கு ட்ரெண்டிங்கில் இருக்கும். நிலைமை இப்படி இருக்க வரிசையாக இரண்டு படங்களின் தோல்வி, சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு எழுந்திருக்கும் போட்டி ஆகியவைகளை மனதில் கொண்டு நிச்சயம் இந்த விழாவில் ரஜினிகாந்த் பேசுவார் என அவரது ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

Related Post :